Skip to main content

Posts

Showing posts from October, 2017

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெள்ளாடாக விரும்புவேன் ...மணி உருட்டி செபித்துக் காணலாமெனில் பெரும் பெரும் மணிகளை உருட்டி வேண்டுவேன் கற்சிலை முன் வணங்கிக் காண்போமெனில் .. கற்பாறை மலையை உகந்து வணங்குவேன் ஆவின் பாலருந்தி அவனைக் காணலாமெனில் ...சிசுவும் கன்றும் அவனைக் காண்பாரே .. கொண்டவளைத்  தள்ளி விண்ணவனை நாடலாமெனில் ஆயிரமாயிரம் மக்கள் அலியாகாரோ? திண்ணமாகச் சொல்வாள் பக்தமீரா  அன்பின்றி வாரான் நந்தலாலா.