Skip to main content

Posts

Showing posts from November, 2016

பிள்ளைகளுக்கு வரன் வது பார்க்க ஆரம்பிக்கும்முன்...

முதலில் உங்கள் மகன் அல்லது மகளிடம் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவதாக கூறுங்கள் அவர்களின் கருத்தை கேளுங்கள் அவர்கள் சம்மதம் தெரிவித்த பின் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு  ஒரு நல்ல ஜோதிடரை சந்தித்து தன்  பிள்ளைக்கு திருமணம் செய்ய சாதகமான காலம் எப்போது ..தோஷ நிலை எவ்வாறு உள்ளது..அதற்கு தகுந்த துணையை தேர்நதெடுக்கும் வழிகள் என்ன என கேட்டறிந்து .ஒரு நல்ல வளர்பிறை திதியை தேர்ந்தெடுத்து  உங்கள் பிள்ளைகளுக்கு தகுந்த துணையை தேட தொடங்கலாம்..

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்கிறான்... தகவல் தொழில் நுட்பம் என்ற ஒன்று வந்தபின்..மனிதன் யோசிப்பதையே விட்டுவிட்டானோ என்ற ஐயம் எழுகிறது ..எந்த ஒரு கலையும் விரும்பி பாடுபட்டு கற்று அனுபவம் பெற்று அதில் நிபுணன் ஆவதே இயல்பு.. இப்பொழுதும் மற்ற துறைகள் மேலே கூறியது போல முறையாக போய்க்கொண்டு இருக்கிறது ஆனால் ஒருகாலத்தில் யாருக்கும் புரியாத புதிராய் இருந்த ஜோதிடம்..  அரைகுறை ஜோதிடர்களாலும் ஜோதிடம் அறியாதவர்களாலும் சிக்கி சின்னாபின்ன படுகிறது..பல் இல்லாத மனிதன் பலவற்றையும் குதப்பி துப்புவதைப்போல இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களை எப்படி சரி செய்வது.. நோய்களைபற்றி ஊடகங்களில் கவனித்துவிட்டு தனக்கும் அந்தநோய் வந்துவிடுமோ?என்று அஞ்சி எடுத்ததற்கெல்லாம் தன்னையும் தன் வாரிசுகளையும் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி  கண்ட மருந்துகளையும் விழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. இப்போது ஜோதிடத்தையும் பிரித்து மேய அனேகர் கிளம்பிவிட்டனர்.. ஜோதிடம் நன்கு அறிந்தவர்களே ஜோதிடம் சார்ந்த அனைத்

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவர்கள் எனக்கு போன்செய்து  இன்னும் இரண்டுமணி நேரம் கழித்து பொருத்தம் பார்க்க உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். வந்த உடனே பொருத்தம் அல்லது பலன் சொல்வது என் பழக்கம் அல்ல ..அவர்களிடம் பிறந்த தேதி மாதம் வருடம் நேரம் வாங்கிவிட்டு பஞ்சாங்கத்தை பயன்படுத்தி அவர்களின் ஜாதகத்தை கையாலேயே(இப்போது ஜாதகம் கணிக்கும் மென்பொருளை அனேகர் பயன்படுத்துகின்றனர்) ஜாதகம் கணித்து பின் பலனோ பொருத்தமோ பார்ப்பது என் வழக்கம். அவர்களிடம் அது போல பிறந்த தேதி கேட்க அவர்கள் நேரில் வந்து சொல்கிறோம் என்றார்கள். காரில் வந்து இறங்கிய அவர்கள் கையில் மகனின் கணினி ஜாதகமும் இரு பெண்களின் பிறந்த தேதி நேரம் போன்ற குறிப்பு மட்டுமே இருந்து. அவர்களின் கைபேசியில் ஜாதகம் கணிக்கும் மென் பொருள் உள்ளது அதை வைத்து அவர்களே ஜாதகம் கணித்து விட்டனர். பின் என்னிடம் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் கூறுங்கள் போதும் என்கிறார்கள். நானும் பொறுமையாக கையால் ஜாதகம் கணித்தேன் .அவர்கள் கணித்த

பெற்றோரும் பிள்ளைகளும்

1 உடல் சக்தி குறைவு     2 சுற்று சூழல்                     3குறிக்கோள் இல்லாமை இவை மனச்சோர்வுக்கு முக்கிய காரணிகள்.   பெரும்பாலான குழந்தைகள் மற்றும் வளர்  இளம் பருவத்தினருக்கு சரிவிகித உணவும் ஊட்டச்சத்தும் கிடைப்பதில்லை.. கேப்பை உளுந்து  பயறுவகைகள்  நெய் வெல்லம் இவற்றை கொண்டு வீட்டிலேயே வித விதமான திண்பண்டங்கள செய்து தருவதில்லை.. மாறாக சாக்லெட் பாலில் கலந்து குடிக்கும் ஊட்டசத்துபானங்கள் (இது தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் வேறு கிரகத்திலிருத்தா கிடைக்கிறது) எண்ணையில் பொரித்த விதவிதமான பண்டங்கள் சிக்கன்65 என்று உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் எல்லாவற்றையும் குழந்தை பருவத்திலேயே சாப்பிட பழக்கிவிட்டு பின்நாட்களில் என் பிள்ளை  இதைத்தான் சாப்பிடுகிறாள்(ன்) வேறெதுவும் சாப்பிடுவதில்லை என்று மற்றவர்களிடம் பெருமையாக? சொல்லிக் கொள்கிறோம். காலத்திற்கேற்றவாறு நடை உடை பாவனையை மாற்றிக்கொண்டோம்.. உணவு பழக்கத்தையுமா மாற்றிக்கொள்ள வேண்டும்  நாம் ஆரோக்யமாக வாழ்வதற்கான ஆதாரமே நாம் உண்ணும் உணவுதானே! ஒரு செம்பு பானை அல்லது வாட்டர்ஃபில்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதிலிருந்து கிடைக்கும் நீரை

பரமஹம்ச யோகானந்தர்

பரமஹமச யோகானந்தர் 5.1.1893 ஆம் ஆண்டு இந்தியாவில்  பிறந்தவர். மகா அவதாரம் பாபாஜியின் சீடர்களுள் ஒருவரான  ஶ்ரீலாகரிமகாசயரின் சீடரான ஶ்ரீயுக்தேஸ்வரின் நெருக்கமான அன்பை பெற்ற சீடர்.... இவரின் வாழ்நாளில் பாதி வெளிநாடுகளில்         யோக சத்சங்கங்கள்        அமைத்து அதில் பணியாற்றுவதிலேயே கழிந்தது . தனது வாழ்நாள் அனுபவங்களை ' ஒருயோகியின் சுயசரிதை' என்ற நூலாக  எழுதியவர். இளம்வயதிலேயே கடவுளை தேடி  இவர் செய்த பயணம்.. கற்றுக்கொண்டபாடங்கள்.. நெகிழ்வானநிகழ்வுகள் ..இவரின் குருவுடனான புரிதல்கள் என படிக்க படிக்க மிக அருமையான புத்தகம்..புத்தகத்தை படித்து முடிக்கவும் அவர் தற்போதும் நம்மோடு இருப்பது போன்ற இனிமையான உணர்வை தருகிறது..பலவிதமான போலிச்சாமியார்களை பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு உண்மையான ஆன்மீகத்தை உணர்த்துகிறது  ' ஒரு யோகியின் சுய சரிதை'. இ புத்தகமாக படிக்க நினைப்பதை விட.. நிஜமான புத்தகத்தையே வாங்கி படிக்கலாம். விலை 127 தான்.

நட்சத்திரங்கள்...(1)

அன்றாட சுப நிகழ்வுகளுக்கு  பயன்படுத்தும் நட்சத்திரங்களில்.. அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகள் நீடித்து நிலைத்திருக்கும். அதே போன்று வளர்பிறை பஞ்சமி திதியில் செய்யும் நற்காரியங்களும் நீடித்து நிலைத்திருக்கும்.. குழந்தைகளுக்கு அவர்களது ஜென்ம நட்சத்திரங்களையே பெயராக வைப்பதை தவிர்க்கலாம். முக்கியமாக சித்ரா  அனு  ரேவதி  இந்த பெயர்களை  தவிர்க்கலாம்..

திருமண பொருத்தம்

மனிதனை மற்றொரு பரிநாமத்திற்கு  கொண்டுசெல்வது திருமணம் ஆகும். குடும்ப தலைவன் தந்தை என்ற மாற்றங்களுக்கு முதல் படி திருமணம்.  இதில் முதலில் பார்க்க வேண்டியது இருவரின் கல்வித்தகுதி.  அதில் ஏற்றதாழ்வுகள் அதிகம் இருக்க கூடாது. பின் இருவீட்டாரின் பொருளாதார நிலை. இருவரின் நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவாக இருக்க கூடாது .   அஸ்வினி மகம் மூலம் ஆயில்யம் கேட்டை ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரங்களும் பாதரஜ்ஜு..  பரணி  பூரம் பூராடம்  பூசம்  அனுஷம் உத்திரட்டாதி  தொடை ரஜ்ஜு...கார்த்திகை உத்திரம் உத்திராடம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி வயிறு ரஜ்ஜு... ரோகிணி அஸ்தம் திருவோணம் திருவாதிரை சுவாதி சதையம் கண்ட ரஜ்ஜு..மிருகசிரீடம் சித்திரை அவிட்டம் சிரசு ரஜ்ஜு...இருவர் லக்கினமும்  6  8 ஆக வரக்கூடாது...(உதாரணம்:ஆண் லக்கினம் கன்னி எனில் பெண் லக்கினம் கும்பம்  மேஷம் ஆக இருந்தால் பொருந்தாது.. ) தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமைவரும் .. இருவருக்கும் தோஷங்கள் சம நிலையில் இருக்க வேண்டும்..முக்கியமாக புத்திர தோஷம் இருவருக்கும் கடுமையாக இருக்க கூடாது.. இருவருக்கும் ஜாதகப்பொருத்தம் இல்லை என்றால் விட்டுவிட வேண்டும்.. மேற்கொண்டு பெ