மனிதனை மற்றொரு பரிநாமத்திற்கு கொண்டுசெல்வது திருமணம் ஆகும். குடும்ப தலைவன் தந்தை என்ற மாற்றங்களுக்கு முதல் படி திருமணம். இதில் முதலில் பார்க்க வேண்டியது இருவரின் கல்வித்தகுதி. அதில் ஏற்றதாழ்வுகள் அதிகம் இருக்க கூடாது. பின் இருவீட்டாரின் பொருளாதார நிலை. இருவரின் நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவாக இருக்க கூடாது . அஸ்வினி மகம் மூலம் ஆயில்யம் கேட்டை ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரங்களும் பாதரஜ்ஜு.. பரணி பூரம் பூராடம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி தொடை ரஜ்ஜு...கார்த்திகை உத்திரம் உத்திராடம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி வயிறு ரஜ்ஜு... ரோகிணி அஸ்தம் திருவோணம் திருவாதிரை சுவாதி சதையம் கண்ட ரஜ்ஜு..மிருகசிரீடம் சித்திரை அவிட்டம் சிரசு ரஜ்ஜு...இருவர் லக்கினமும் 6 8 ஆக வரக்கூடாது...(உதாரணம்:ஆண் லக்கினம் கன்னி எனில் பெண் லக்கினம் கும்பம் மேஷம் ஆக இருந்தால் பொருந்தாது.. ) தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமைவரும் .. இருவருக்கும் தோஷங்கள் சம நிலையில் இருக்க வேண்டும்..முக்கியமாக புத்திர தோஷம் இருவருக்கும் கடுமையாக இருக்க கூடாது.. இருவருக்கும் ஜாதகப்பொருத்தம் இல்லை என்றால் விட்டுவிட வேண்டும்.. மேற்கொண்டு பெயர் பொருத்தம் பார்பது பின்னாளில் வரும் சிரமங்களை சரிசெய்ய முடியாமல் போய்விடும் அப்போது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு கொண்டு ஜோதிடரிடம் செல்வதால் எந்த பயனும் இல்லை.. ஜோதிடத்தை நம்பினால் முழுமையாக நம்ப வேண்டும். நம் விருப்பத்திற்கேற்றபடி பொருத்தங்கள் அமைவதில்லை ஜோதிடத்திற்கென்று நெறிமுறை உள்ளது அதன்படி நடப்பதே நன்மை தரும் . நூறு சதவீதம் பொருத்தம் அமைவது கடினம் 60% 70% ஜாதக பொருத்தம இருப்பின் நன்று.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் பொருத்தம் பார்க்காது திருமணம் செய்து கொள்ளலாம்..பின்னாளில் ஜோதிடரை நாடாமல் இருந்தால் சரி.
ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக பலன்களை கூறிவந்திருக்க...
Comments
Post a Comment