Skip to main content

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்கிறான்...
தகவல் தொழில் நுட்பம் என்ற ஒன்று வந்தபின்..மனிதன் யோசிப்பதையே விட்டுவிட்டானோ என்ற ஐயம் எழுகிறது ..எந்த ஒரு கலையும் விரும்பி பாடுபட்டு கற்று அனுபவம் பெற்று அதில் நிபுணன் ஆவதே இயல்பு.. இப்பொழுதும் மற்ற துறைகள் மேலே கூறியது போல முறையாக போய்க்கொண்டு இருக்கிறது ஆனால் ஒருகாலத்தில் யாருக்கும் புரியாத புதிராய் இருந்த ஜோதிடம்..  அரைகுறை ஜோதிடர்களாலும் ஜோதிடம் அறியாதவர்களாலும் சிக்கி சின்னாபின்ன படுகிறது..பல் இல்லாத மனிதன் பலவற்றையும் குதப்பி துப்புவதைப்போல இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களை எப்படி சரி செய்வது.. நோய்களைபற்றி ஊடகங்களில் கவனித்துவிட்டு தனக்கும் அந்தநோய் வந்துவிடுமோ?என்று அஞ்சி எடுத்ததற்கெல்லாம் தன்னையும் தன் வாரிசுகளையும் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி  கண்ட மருந்துகளையும் விழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. இப்போது ஜோதிடத்தையும் பிரித்து மேய அனேகர் கிளம்பிவிட்டனர்.. ஜோதிடம் நன்கு அறிந்தவர்களே ஜோதிடம் சார்ந்த அனைத்து விசயங்களையும் கையாளவேண்டும். ஜோதிடத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் முறையாக ஜோதிடம் கற்றும், கற்றதை ஆய்வு செய்தும் தெளிவு பெறவேண்டும்..(எண்ணற்ற ஜாதகங்களை ஆய்வு செய்து கற்றுக்கொள்ள வேண்டும் ஒருவரின் ஜாதகத்தில் நாளை என்ன நடக்கும் என்று பார்ப்பதை விட கடந்த காலங்களில் என்ன நடந்தது அந்த சம்பவங்கள் ஜாதகத்தில் பொருந்துகிறதா? என்று பார்ப்பதே சரியான ஆய்வு ஆகும் .) சரி விசயத்திற்கு வருகிறேன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்கிய பஞ்சாங்கம் மட்டுமே நடைமுறையில் இருந்தது திருக்கணிதபஞ்சாங்கம்் என்பது கிரக  நட்சத்திர நகர்வுகளை துல்லியமாக கணித்து அதை அச்சிட்டு ஜோதிட செயல்பாடுகளுக்கு  பயன்படுத்தப்படுகிறது நல்ல விசயம்தான்.      நம்ம அப்பா இங்லீஸ் மீடியத்தில் படிக்கல..  நம்ம தாத்தா தமிழ்கூட படிக்கல.. நாம கொஞ்சம் படிச்சோம் நம்ம பிள்ளைகளை நிறைய படிக்க வைக்கிறோம்...ஆனா நம்ம தாத்தா அப்பாவோட கல்வி நிலையை மாத்த முடியாது. அது போலத்தான் காலம்காலமாக வாக்கியபஞ்சாங்கத்தில் எழுதிவைத்த ஜாதகங்களை சரி பார்க்கலாமே தவிர அவற்றை திருக்கணித முறைக்கு மாற்றகூடாது..அப்படி மாற்ற நினைத்தால் எத்தனை லட்சம் பேருக்கு மாற்றுவது.. எது சரியான ஜோதிட கணிப்பு என்ற குழப்பம் வந்துவிடும். திருகணிதமோ வாக்கியமோ முடிந்தவரை கைகளால் கணித்து ஜாதக பலன் பார்க்கலாம்.. இலவசமாகவும் , பணம் கொடுத்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் ஜோதிட சாப்ட்வேர்களில் பல ஒழுங்கற்றவை.... ஜோதிடம்   ஆன்மீகம் இரண்டிலும் வியாபாரயுக்தி  கலந்து இரண்டையுமே கேள்விக்குறி ஆக்குகிறது..
என்னை பொறுத்தவரை 2000க்கு முன் பிறந்த அனைவருக்கும் வாக்கிய பஞ்சாங்கபடி ஜாதக கணிதம் 2000க்கு பின் பிறந்த அனைவருக்கும் திருக்கணித பஞ்சாங்கபடி ஜாதக கணிதம் . ஆம்.. ஜோதிடர் என்பவர்  தான் கற்றதை தன் கைப்பட செயலாக்கி  அதன் பலனை மற்றவருக்கு வழங்கும்  தீராத தேடல் நிறைந்த  ஆராய்ச்சியாளர.

Comments

Popular posts from this blog

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...