Skip to main content

Posts

இறையருளால் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வாழ்க .

அம்மன் வீதி உலா.
Recent posts

திருமணம் எனும் நீண்டநாள் பந்தம் .

திருமணம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவையான ஒன்று. வெறுமனே நட்சத்திர பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தருவோர் அனேகர் உண்டு... காரணம்  திருமண பொருத்தம் பற்றி எந்த விபரமும் அறியாதே ஆகும்  ..ஜாதகம் பொருந்தி இருந்தால் கூட நட்சத்திர பொருத்தத்தில் குறைவான எண்ணிக்கை வந்துவிட்டால்.. பொருத்தம் இல்லையோ என இவர்கள் மனம் சந்தேகப்படுகிறது. சமூக நடப்புகளில் பெண்கள் மீதான அலட்சியம் மற்றும் இரக்கமற்ற வன்முறைகளை சொல்லாலும் செயலாலும் நடைமுறைப் படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களின்(மணமகள்) மகிழ்ச்சி கேள்விக் குறியாகி விடுகிறது. எனவே எனது ஆதரவு மணமகள் பக்கமே நிலைத்திருக்கிறது. ஆண் பெண் லக்கினம் ஆறு எட்டாக அமைந்தால் அந்த வரன்(மாப்பிள்ளை) வேண்டாம். மாப்பிள்ளையின் ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம் , லக்கினம் பலவீன மென்றால் அந்த வரன் வேண்டாம். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பர்..வருமான குறைவோ அழகு குறைவோ பெரிய விசயமே அல்ல.. பெண்ணை நேசிக்கத் தெரியாத ,உறுதுணையாக இருக்கத் தெரியாத வரன் தேவையேஇல்லை.. எனவே லக்கினத்துக்கு முக்கியத்துவம் தாருங்கள்.. உருவமோ சூழ்நிலையோ ஒருவரை இன்னாரென்று க

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெள்ளாடாக விரும்புவேன் ...மணி உருட்டி செபித்துக் காணலாமெனில் பெரும் பெரும் மணிகளை உருட்டி வேண்டுவேன் கற்சிலை முன் வணங்கிக் காண்போமெனில் .. கற்பாறை மலையை உகந்து வணங்குவேன் ஆவின் பாலருந்தி அவனைக் காணலாமெனில் ...சிசுவும் கன்றும் அவனைக் காண்பாரே .. கொண்டவளைத்  தள்ளி விண்ணவனை நாடலாமெனில் ஆயிரமாயிரம் மக்கள் அலியாகாரோ? திண்ணமாகச் சொல்வாள் பக்தமீரா  அன்பின்றி வாரான் நந்தலாலா.

Thiruvaathavoor

பாண்டிய மன்னனின்  அமைச்சராக இருந்த  மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் ...மாணிக்கவாசகர் சிவபெருமான் மீதுள்ள பக்தியினால் குதிரைவாங்கிவர மன்னன் தந்த பணத்தை இறைவழிபாட்டிற்கே செலவழித்தார் ..இதை அறிந்த மன்னன் எங்கே பரிகள் (குதிரைகள்) எனக்கேட்க  இறைவன் நரிகளை பரிகளாக்கி  பாண்டிய மன்னன் முன் அனுப்பி பின் அவைகளை நரிகளாக்கி காட்டிற்கு ஓடச்செய்து பக்தரான மாணிக்கவாசகர் புகழை உலகறியச்செய்தார்  திருவாதவூர் சென்று இறைவனை தொழுவோம்.

பிள்ளைகளுக்கு வரன் வது பார்க்க ஆரம்பிக்கும்முன்...

முதலில் உங்கள் மகன் அல்லது மகளிடம் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவதாக கூறுங்கள் அவர்களின் கருத்தை கேளுங்கள் அவர்கள் சம்மதம் தெரிவித்த பின் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு  ஒரு நல்ல ஜோதிடரை சந்தித்து தன்  பிள்ளைக்கு திருமணம் செய்ய சாதகமான காலம் எப்போது ..தோஷ நிலை எவ்வாறு உள்ளது..அதற்கு தகுந்த துணையை தேர்நதெடுக்கும் வழிகள் என்ன என கேட்டறிந்து .ஒரு நல்ல வளர்பிறை திதியை தேர்ந்தெடுத்து  உங்கள் பிள்ளைகளுக்கு தகுந்த துணையை தேட தொடங்கலாம்..

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்கிறான்... தகவல் தொழில் நுட்பம் என்ற ஒன்று வந்தபின்..மனிதன் யோசிப்பதையே விட்டுவிட்டானோ என்ற ஐயம் எழுகிறது ..எந்த ஒரு கலையும் விரும்பி பாடுபட்டு கற்று அனுபவம் பெற்று அதில் நிபுணன் ஆவதே இயல்பு.. இப்பொழுதும் மற்ற துறைகள் மேலே கூறியது போல முறையாக போய்க்கொண்டு இருக்கிறது ஆனால் ஒருகாலத்தில் யாருக்கும் புரியாத புதிராய் இருந்த ஜோதிடம்..  அரைகுறை ஜோதிடர்களாலும் ஜோதிடம் அறியாதவர்களாலும் சிக்கி சின்னாபின்ன படுகிறது..பல் இல்லாத மனிதன் பலவற்றையும் குதப்பி துப்புவதைப்போல இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களை எப்படி சரி செய்வது.. நோய்களைபற்றி ஊடகங்களில் கவனித்துவிட்டு தனக்கும் அந்தநோய் வந்துவிடுமோ?என்று அஞ்சி எடுத்ததற்கெல்லாம் தன்னையும் தன் வாரிசுகளையும் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி  கண்ட மருந்துகளையும் விழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. இப்போது ஜோதிடத்தையும் பிரித்து மேய அனேகர் கிளம்பிவிட்டனர்.. ஜோதிடம் நன்கு அறிந்தவர்களே ஜோதிடம் சார்ந்த அனைத்

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவர்கள் எனக்கு போன்செய்து  இன்னும் இரண்டுமணி நேரம் கழித்து பொருத்தம் பார்க்க உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். வந்த உடனே பொருத்தம் அல்லது பலன் சொல்வது என் பழக்கம் அல்ல ..அவர்களிடம் பிறந்த தேதி மாதம் வருடம் நேரம் வாங்கிவிட்டு பஞ்சாங்கத்தை பயன்படுத்தி அவர்களின் ஜாதகத்தை கையாலேயே(இப்போது ஜாதகம் கணிக்கும் மென்பொருளை அனேகர் பயன்படுத்துகின்றனர்) ஜாதகம் கணித்து பின் பலனோ பொருத்தமோ பார்ப்பது என் வழக்கம். அவர்களிடம் அது போல பிறந்த தேதி கேட்க அவர்கள் நேரில் வந்து சொல்கிறோம் என்றார்கள். காரில் வந்து இறங்கிய அவர்கள் கையில் மகனின் கணினி ஜாதகமும் இரு பெண்களின் பிறந்த தேதி நேரம் போன்ற குறிப்பு மட்டுமே இருந்து. அவர்களின் கைபேசியில் ஜாதகம் கணிக்கும் மென் பொருள் உள்ளது அதை வைத்து அவர்களே ஜாதகம் கணித்து விட்டனர். பின் என்னிடம் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் கூறுங்கள் போதும் என்கிறார்கள். நானும் பொறுமையாக கையால் ஜாதகம் கணித்தேன் .அவர்கள் கணித்த