Skip to main content

திருமணம் எனும் நீண்டநாள் பந்தம் .

திருமணம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவையான ஒன்று.

வெறுமனே நட்சத்திர பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தருவோர் அனேகர் உண்டு...
காரணம்  திருமண பொருத்தம் பற்றி எந்த விபரமும் அறியாதே ஆகும்  ..ஜாதகம் பொருந்தி இருந்தால் கூட நட்சத்திர பொருத்தத்தில் குறைவான எண்ணிக்கை வந்துவிட்டால்.. பொருத்தம் இல்லையோ என இவர்கள் மனம் சந்தேகப்படுகிறது.

சமூக நடப்புகளில் பெண்கள் மீதான அலட்சியம் மற்றும் இரக்கமற்ற வன்முறைகளை சொல்லாலும் செயலாலும் நடைமுறைப் படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்படும்
பெண்களின்(மணமகள்)
மகிழ்ச்சி கேள்விக்
குறியாகி விடுகிறது.
எனவே எனது ஆதரவு மணமகள் பக்கமே நிலைத்திருக்கிறது.

ஆண் பெண் லக்கினம் ஆறு எட்டாக அமைந்தால் அந்த வரன்(மாப்பிள்ளை)
வேண்டாம்.

மாப்பிள்ளையின் ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம் ,
லக்கினம் பலவீன
மென்றால் அந்த வரன் வேண்டாம்.

மனம் இருந்தால் மார்கமுண்டு என்பர்..வருமான குறைவோ அழகு குறைவோ பெரிய விசயமே அல்ல.. பெண்ணை நேசிக்கத் தெரியாத ,உறுதுணையாக இருக்கத் தெரியாத வரன் தேவையேஇல்லை..
எனவே லக்கினத்துக்கு
முக்கியத்துவம் தாருங்கள்..

உருவமோ சூழ்நிலையோ ஒருவரை இன்னாரென்று காட்டாது...பெண்ணை பெற்ற ஒவ்வொரு தாய் தகப்பனும் மிக கவனமாக வரனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணை சொர்கமா நரகமா என ஓரளவு அவரவர் ஜாதகமே சொல்லிவிடும்.அதற்கேற்றார் போல் மனதை சமநிலையில் தயார்செய்து கொள்வது நல்லது.

Comments

Popular posts from this blog

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்க...

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...