சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க அவர்கள் எனக்கு போன்செய்து இன்னும் இரண்டுமணி நேரம் கழித்து பொருத்தம் பார்க்க உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். வந்த உடனே பொருத்தம் அல்லது பலன் சொல்வது என் பழக்கம் அல்ல ..அவர்களிடம் பிறந்த தேதி மாதம் வருடம் நேரம் வாங்கிவிட்டு பஞ்சாங்கத்தை பயன்படுத்தி அவர்களின் ஜாதகத்தை கையாலேயே(இப்போது ஜாதகம் கணிக்கும் மென்பொருளை அனேகர் பயன்படுத்துகின்றனர்)
ஜாதகம் கணித்து பின் பலனோ பொருத்தமோ பார்ப்பது என் வழக்கம். அவர்களிடம் அது போல பிறந்த தேதி கேட்க அவர்கள் நேரில் வந்து சொல்கிறோம் என்றார்கள். காரில் வந்து இறங்கிய அவர்கள் கையில் மகனின் கணினி ஜாதகமும் இரு பெண்களின் பிறந்த தேதி நேரம் போன்ற குறிப்பு மட்டுமே இருந்து. அவர்களின் கைபேசியில் ஜாதகம் கணிக்கும் மென் பொருள் உள்ளது அதை வைத்து அவர்களே ஜாதகம் கணித்து விட்டனர். பின் என்னிடம் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் கூறுங்கள் போதும் என்கிறார்கள். நானும் பொறுமையாக கையால் ஜாதகம் கணித்தேன் .அவர்கள் கணித்தில் ஆறில் சனி நான் கணித்தில் ஐந்தில் சனி. இப்போது என்ன சிக்கல் என்றால் அந்த பெண் அவர்களுக்கு மிகவும் தெரிந்த பெண்..அவர்கள் கணக்குப்படி ஆறில் சனி என்றால் புத்திர தோஷம் இல்லை .அவர்களின் மகனுக்கு கடுமையான புத்திர தோஷம்..கணினி ஜாதகம் திருக்கணிதம் சார்ந்து கணிக்கப்பட்டது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் வாக்கிய முறைப்படி கணித்தேன்.ஜோதிடம் பற்றி ஒன்றுமே அறியாத அவர்கள் கைபேசியில் நொடியில் ஜாதகம் கணிக்கும் வசதி வந்து விட்டதாலேயே அவர்களே ஜாதகம் கணித்து காலில் வெண்ணீர் ஊற்றிகொண்டது போல.. ஐந்து வருட ஜோதிட ஆய்வில் இருக்கும் என் போன்றோரிடம் யோசிக்கவே விடாமல் ஆமாம் இல்லை இரண்டில் ஒன்று சொல்லுங்க போதும் என்கிறார்கள். இவர்களிடம் பணம் இருந்து விட்டாலே ஜாதக பலாபலன்களுக்கும் இவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று நினைத்துக்
கொள்கிறார்கள்.எல்லா
வகை மனிதர்களுக்கும் அவர்கள் கொட்டி வைத்திருக்கும் சொத்துக்களால் தீர்க்க முடியாத எத்தனையோ பிரச்சனைகளை கிரகங்கள் தரலாம்.மேலும் அவர்கள் நம்பும் சொத்தே அவர்கள் கையைவிட்டு திடீரென மாயமாகி அவர்களை கடனாளி ஆக்கலாம். இதையெல்லாம் உணராமல் அவசர பொருத்தம் பார்பவர்களை இனி தவிர்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.( அவர்களிடம் என் அதிர்ப்தியை தெரிவித்து பொருத்தம் பார்த்து அனுப்பினேன் ஆழ்ந்த ஜோதிட பார்வையுள்ள என்னால் அன்று முழுமையாக செயலபட முடியாமல் எந்திரம் போல் மேலோட்டமாக பொருத்தம் பார்த்து நான் வாங்கிய தட்சணை கனக்கிறது)
ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக பலன்களை கூறிவந்திருக்க...
Comments
Post a Comment