Skip to main content

SRIGURU ASTRO: பிறந்தஜாதகத்தின் பயன் என்ன?

SRIGURU ASTRO: பிறந்தஜாதகத்தின் பயன் என்ன?: 1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு.  8.ஆயுள் மேற்...

Comments

Popular posts from this blog

பிறந்தஜாதகத்தின் பயன் என்ன?

1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு.  8.ஆயுள் மேற்கண்ட விசயங்களின் பலம்   பலவீனம் அறியலாம் . இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம். ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம். பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது. இருவருக்கும்  ஜாதக ரீதியான  பொருத்தம் வேண்டும். பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு  ... வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல்   திருமணமுகூர்த்தம்  மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை   தோஷமற்ற   நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.

பரமஹம்ச யோகானந்தர்

பரமஹமச யோகானந்தர் 5.1.1893 ஆம் ஆண்டு இந்தியாவில்  பிறந்தவர். மகா அவதாரம் பாபாஜியின் சீடர்களுள் ஒருவரான  ஶ்ரீலாகரிமகாசயரின் சீடரான ஶ்ரீயுக்தேஸ்வரின் நெருக்கமான அன்பை பெற்ற சீடர்.... இவரின் வாழ்நாளில் பாதி வெளிநாடுகளில்         யோக சத்சங்கங்கள்        அமைத்து அதில் பணியாற்றுவதிலேயே கழிந்தது . தனது வாழ்நாள் அனுபவங்களை ' ஒருயோகியின் சுயசரிதை' என்ற நூலாக  எழுதியவர். இளம்வயதிலேயே கடவுளை தேடி  இவர் செய்த பயணம்.. கற்றுக்கொண்டபாடங்கள்.. நெகிழ்வானநிகழ்வுகள் ..இவரின் குருவுடனான புரிதல்கள் என படிக்க படிக்க மிக அருமையான புத்தகம்..புத்தகத்தை படித்து முடிக்கவும் அவர் தற்போதும் நம்மோடு இருப்பது போன்ற இனிமையான உணர்வை தருகிறது..பலவிதமான போலிச்சாமியார்களை பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு உண்மையான ஆன்மீகத்தை உணர்த்துகிறது  ' ஒரு யோகியின் சுய சரிதை'. இ புத்தகமாக படிக்க நினைப்பதை விட.. நிஜமான புத்தகத்தையே வாங்கி படிக்கலாம். விலை 127 தான்.

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்கிறான்... தகவல் தொழில் நுட்பம் என்ற ஒன்று வந்தபின்..மனிதன் யோசிப்பதையே விட்டுவிட்டானோ என்ற ஐயம் எழுகிறது ..எந்த ஒரு கலையும் விரும்பி பாடுபட்டு கற்று அனுபவம் பெற்று அதில் நிபுணன் ஆவதே இயல்பு.. இப்பொழுதும் மற்ற துறைகள் மேலே கூறியது போல முறையாக போய்க்கொண்டு இருக்கிறது ஆனால் ஒருகாலத்தில் யாருக்கும் புரியாத புதிராய் இருந்த ஜோதிடம்..  அரைகுறை ஜோதிடர்களாலும் ஜோதிடம் அறியாதவர்களாலும் சிக்கி சின்னாபின்ன படுகிறது..பல் இல்லாத மனிதன் பலவற்றையும் குதப்பி துப்புவதைப்போல இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களை எப்படி சரி செய்வது.. நோய்களைபற்றி ஊடகங்களில் கவனித்துவிட்டு தனக்கும் அந்தநோய் வந்துவிடுமோ?என்று அஞ்சி எடுத்ததற்கெல்லாம் தன்னையும் தன் வாரிசுகளையும் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி  கண்ட மருந்துகளையும் விழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. இப்போது ஜோதிடத்தையும் பிரித்து மேய அனேகர் கிளம்பிவிட்டனர்.. ஜோதிடம் நன்கு அறிந்தவர்களே ஜோதிடம் சார்ந்த அனைத்